முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! கல்விக் கடன் தொகை ரூ.5 லட்சமாக உயர்வு..!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

Cooperatives Minister Periyakaruppan has announced that the education loan provided by cooperatives has been increased from Rs.1 lakh to Rs.5 lakh.
11:32 AM Jun 11, 2024 IST | Chella
Advertisement

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமின்றி, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதி பின்பற்றப்படும். இந்திய குடிமகன், 30 வயதுக்குட்பட்டோர் இந்த கல்விக் கடனை பெற தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அதிர வைக்கும் சாலிகிராமம் அப்பார்ட்மெண்ட் சம்பவம்..!! 15 வயது சிறுமியை இரவு முழுவதும்..!! சிக்கிய பெண் ஆடை வடிவமைப்பாளர்..!!

Tags :
educationLOAN
Advertisement
Next Article