பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! செப்.17ஆம் தேதி அரசு விடுமுறை..!!
தமிழ்நாடு அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதியன்று பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி பிறை தெரியவில்லை என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 17ஆம் தேதியன்று பொது விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் செப்.17ஆம் தேதி அரசு விடுமுறையாகும். அதாவது, இடையில் வரும் செப்டம்பர் 16 அன்று விடுப்பு எடுத்துக் கொண்டால் அடுத்து வரும் செப்டம்பர் 17 அரசு விடுமுறையாகி விடும். அப்படி பார்த்தால் செப்டம்பர் 14 முதல் 17 வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.
Read More : அதிமுகவின் முக்கியப் புள்ளி தவெக-வில் இணைவது உறுதியா..? எடப்பாடி பழனிசாமியே சொன்ன பரபரப்பு தகவல்..!!