ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! பொங்கல் பரிசுத் தொகை ரூ.1,000..!! டோக்கன் எப்போது கிடைக்கும்..?
பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை மேலும் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை வெல்லம் வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த முறையும் வழங்கப்படாது. அதற்கு பதிலாக ரூ.1,000 பணம் வழங்கப்படுகிறது. மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய - மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், பொங்கல் ப்ண்டிகைக்கு முன்னதாகவே பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2022இல் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023இல் பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இந்த வருடம் கரும்பு வழங்கப்படும். ஆனால் வெல்லம் இருக்காது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வரும் 20ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Read More : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.60,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!