ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! இனி இந்த பொருளையும் இலவசமாக பெறலாம்..!! வெளியான அறிவிப்பு..!!
மத்திய அரசை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கான கோதுமை ஒதுக்கீட்டை 1,038 டன்னாக கடந்தாண்டு குறைத்தது. இதனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கோதுமை இருப்பை பொறுத்து ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ என கோதுமை விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பல ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை கிடைக்காத சூழல் உருவானது.
இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு வழக்கம் போல கோதுமையை வழங்க வேண்டும் என்று தமிழக உணவுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழகத்திற்கான கோதுமையை உயர்த்தி வழங்குமாறு மத்திய அரசை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணர், உணவுத்துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய உணவுத் துறை அதிகாரிகளையும் சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை மாதம் 8,500 டன்னில் இருந்து 17,100 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த மாதமே கோதுமை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தது. இதனால் பண்டிகை காலம் என்பதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமையை பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோவும் மற்ற இடங்களில் இரண்டு கிலோ வரையும் கோதுமை வழங்கப்படுகிறது.
Read More : 3 நொடி காட்சிகளுக்கு ரூ.10 கோடி வாங்கிய தனுஷ்..? நயனிடம் இருந்து கைமாறிய பணம்..!! புட்டு வைத்த பயில்வான்..!!