ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! காத்திருக்கும் தீபாவளி பரிசு..!!
தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி, கோதுமை, 2 கிலோ சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவற்ற இலவசமாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தமிழ்நாட்டிற்கு 8,500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகை சமயத்திற்குள் மக்களுக்கு வேண்டிய பொருள்களை விநியோகம் செய்யும் வகையில், நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.