For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..!! இனி மூன்றே தவணைகளில் ரூ.14,000 நிதியுதவி..!! எப்போதெல்லாம் கிடைக்கும்..?

07:18 AM Apr 01, 2024 IST | Chella
கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்     இனி மூன்றே தவணைகளில் ரூ 14 000 நிதியுதவி     எப்போதெல்லாம் கிடைக்கும்
Advertisement

தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி' எண் பெற வேண்டும். அப்படி பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, 4-வது மாதத்துக்குப் பின், இரண்டாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதற்கிடையே, உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் 2 முறை வழங்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் 3-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவரை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின்நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில், இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி 3 தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Read More : இன்று முதல் Paracetamol உள்ளிட்ட மாத்திரைகளின் விலை உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Advertisement