மின்வாரிய ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாடு அரசு சார்பில் மின்வாரிய ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பல காலமாக இருக்கும் கோரிக்கை பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும் என்பதே. அப்படி இருக்க அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக அரசு ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகிறதாம். சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் கர்நாடகாவில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு அரசு ஊழியர்கள் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்தே தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும். இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் வரும் பட்ஜெட்டில், அதாவது பிப்ரவரி மாதம் பழைய பென்ஷன் பற்றிய அறிவிப்பு வரும். அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடக்கின்றன. பட்ஜெட்டில் பழைய பென்ஷன் பற்றி கூறுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால் புதிய ஓய்வூதியத்தில் மாற்றங்களை செய்து அதை கொண்டு வர தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். லோக்சபா தேர்தலில் அரசு ஊழியர்களிடம் இழந்த ஆதரவை பெறும் வகையில் முதல்வர் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக, தமிழ்நாடு அரசு சார்பாக மின்வாரிய ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மின்வாரிய ஓய்வூதியர், வாழ்நாள் சான்றிதழ் வாங்க எங்கும் செல்ல வேண்டாம்.
சிறப்பம்சங்கள்:
வாழ்நாள் சான்றிதழ்
மருத்துவ காப்பீட்டு அட்டை, பதிவிறக்கம்
ஆதார் எண் இணைப்பு
வருமான வரி தாக்கல் செய்ய, வருடாந்திர ஓய்வூதிய அறிக்கை
ஓய்வூதிய ஆணைகள், படிவங்கள், அறிக்கைகள்
அனைத்தும் பிரத்யேக கைபேசி செயலியில் என்று அறிவித்துள்ளனர்.