வாகன ஓட்டிகளுக்கு செம குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைகிறது..!! தீவிர ஆலோசனையில் மத்திய அரசு..?
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் உயர்வால், நுகர்வோர்களும் லாபம் அடையும் வகையில் விலை குறைப்பை அமல்படுத்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது.
விரைவில் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவிலும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு விலை குறைப்பை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படமால் இந்த விலைக்குறைப்பை கொண்டு வருவது தொடர்பாக துறை சார்ந்த இரு அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை நடந்து வருகிறதாம்.
சர்வதேச சந்தையில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை1 சதவிகிதம் குறைந்து பேரல் ஒன்றின் விலை 70 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளது. தற்போது விலை சரிவை சந்தித்து இருப்பதால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரிப்பதை தாமதிக்கலாம் என்று தெரிகிறது.
Read More : உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட மறந்துறாதீங்க..!! கண்டிப்பா இதையும் பண்ணுங்க..!!