வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!! பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..? பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு..!!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்தான், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவால் 11 ரூபாய் கூடுதல் லாபத்தை லிட்டருக்கு எண்ணெய் நிறுவனங்கள் பெறுகின்றன. இந்த விலையை குறைக்க மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் விலையை முடிவு செய்தாலும், அதன் மீதான வரியை குறைப்பது, 11 ரூபாய் கூடுதல் லாபத்தை லிட்டருக்கு எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க உத்தரவிடுவது போன்ற அறிவிப்புகள் வரலாம்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை. ஆனால் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. அதோடு இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வர்த்தகத்தில் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிகர லாபம் பார்த்துள்ளது. இந்நிலையில், மக்கள் நலன் கருதி இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனாவிற்கு பின் இந்த நிறுவனங்கள் பொருளாதார சரிவில் இருந்து மீண்ட நிலையில்தான், தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் மத்திய அரசு முயன்று வருவதாக செய்திகள் வருகிறது