For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியான செய்தி..!! சென்னை மாநகராட்சி எடுத்து மாஸ் முடிவு..!!

07:21 AM May 21, 2024 IST | Chella
வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியான செய்தி     சென்னை மாநகராட்சி எடுத்து மாஸ் முடிவு
Advertisement

சென்னையில் அடுத்த அதிரடியை மாநகராட்சி முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே, சென்னையில் சுற்றித்திரியும் நாய்களால் சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால்தான், நாய்களை வளர்ப்பது குறித்த விதிமுறைகளை, சென்னை மாநகராட்சி வகுத்து வருகிறது. அதுபோலவே, மாடுகள் விஷயத்திலும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் புற்கள் முளைத்திருப்பதால், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மேய விடுகின்றனர்.

Advertisement

இதனால், இரவு நேரங்களில், சாலையின் நடுவில் படுத்து கிடக்கும் மாடுகளை கண்டு, கனரக வாகனங்கள் திடீரென பிரேக் அடிப்பது, பக்கவாட்டில் செல்வது போன்ற காரணங்களாலும் விபத்துகள் நிகழ்கின்றன. அதேபோல காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்வோரும், வேலைக்கு செல்வோரும் பரபரப்புடன் செல்லும்போது, கால்நடைகள் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருகின்றன. இதனால் பைக்கில் வேகமாக செல்பவர்கள், திடீரென எதிரில் இருக்கும் மாடுகளின் மீது மோதிவிடுவதால், நிலைதடுமாறி விழுந்து கை, கால்களை உடைத்து காயமடைகின்றனர். சிலசமயம், உயிரிழப்பு வரை சென்றுவிடுகிறது.

இந்நிலையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாய்களை போலவே, சென்னையில் சாலைகளில் மாடுகளும் சுற்றித்திரிவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை மாடுகள் முட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. போதிய இடமும், தொழுவமும் இல்லாமல் வளர்ப்பதால்தான், இப்படி மாடுகள் சுற்றித்திரிய நேரிடுகிறதாம். அதனால்தான், மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டி வலியுறுத்தப்பட்டிருக்கிறார்களாம். மாநகராட்சியின் இந்த அதிரடிகள் சென்னைவாசிகளின் கவனத்தை பெற்று வருகின்றன.

Read More : போதைப்பொருளுக்கு அடிமையான விஜய், த்ரிஷா, தனுஷ்..!! உடனே டெஸ்ட் எடுங்க..!! புதிய புயலை கிளப்பிய வீரலட்சுமி..!!

Advertisement