JIO வாடிக்கையாளர்களுக்கு செம குட் நியூஸ்..!! எந்த நிறுவனமும் தராத 5ஜி பிளான்..!! மிகக் குறைந்த விலையில்..!!
ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 பிளான்களுக்கு மேல் தான் 5ஜி அன்லிமிட்டட் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்கும் பிளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இதனால் செல்போன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த பல புதிய பிளான்களை ஜியோ அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது குறைந்த விலையில் 5ஜி இணைய சேவை அளிக்கிறது ஜியோ. அதாவது அன்லிமிடெட் 5G நன்மையை 239 ரூபாய் அல்லது அதற்கு அதிகமான விலை கொண்ட ரீசார்ஜுக்கு மட்டுமே வழங்கி வந்த ஜியோ, இப்போது 200-க்கும் குறைவான திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 5G நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் 198 ரூபாய் திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவை இலவசமாக கிடைக்கும். தினசரி 2 GB டேட்டா மட்டுமின்றி, இதில் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் அனுபவிக்கலாம். இந்த அன்லிமிடெட் 5G பலன்களை MyJio ஆப் மூலம் பெறலாம். இந்த பிளானின் வேலிடிட்டி 14 நாட்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். நீங்கள் 5G அனுபவத்தை சோதனை செய்ய விரும்பினால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.
Read More : நீங்க தினமும் போற சாலையில் இதை கவனிச்சிருக்கீங்களா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!