For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! திடீரென அதிகரித்த வரத்து..!! சரிந்த காய்கறிகளின் விலை..!! விவரம் உள்ளே..!!

The price of vegetables has come down. With this, housewives are happy.
11:14 AM Oct 22, 2024 IST | Chella
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்     திடீரென அதிகரித்த வரத்து     சரிந்த காய்கறிகளின் விலை     விவரம் உள்ளே
Advertisement

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் மழை காரணமாக வரத்து குறைந்ததால், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடு கிடுவென உயர்ந்தது. குறிப்பாக, தக்காளி ரூ.150-க்கும், பீன்ஸ் ரூ.250-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் என இரு மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில் தற்போது, காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தக்காளி ஒரு கிலோ ரூ.35 - 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 - 50-க்கும், சின்ன வெங்காயம் ரூ.40 முதல் 70-க்கும், பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ரூ.90-க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் 30 ரூபாய்க்கும், சுரைக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 15 ரூபாய்க்கும், கொத்தவரை 55 ரூபாய்க்கும், கேரட் 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 10 முதல் 20 ரூபாய்க்கும், முருங்கை ஒரு கிலோ 30 முதல் 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், இஞ்சி 160 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும் கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : குடிமகன்கள் அதிர்ச்சி..!! தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! வெளியாகும் அறிவிப்பு..!!

Tags :
Advertisement