இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த வெங்காயம், பூண்டு விலை..!! வெறும் 25 ரூபாய் தான்..!!
கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெரிய வெங்காயமும், மத்தியப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், பூண்டும் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து சில மாதங்களாக தமிழ்நாட்டிற்கு வரத்து குறைவாக இருந்தது. இதனால், அவற்றின் விலை உச்சத்தை தொட்டது.
அந்த வகையில் ஒரு கிலோ பூண்டு 350 முதல் 450 ரூபாய் வரை விற்பனையானது. சீனாவில் இருந்து இறக்குமதியான பூண்டு, கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பண்டிகை காலம் முடிந்த நிலையில், கிடங்குகளில் இருந்த பூண்டுக்கள், சந்தைக்கு அதிகம் வரத் துவங்கியுள்ளன. இந்நிலையில், பண்டிகை காலம் முடிந்ததாலும், புதிய அறுவடையும் துவங்கியதாலும் பூண்டு விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
அந்த வகையில், கோயம்பேடு மொத்த விற்பனை மளிகை சந்தையில், கிலோ பூண்டு 150 முதல் 200 ரூபாய் வரையும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தப்படும் அத்தியவாசிய பொருளான வெங்காயம், பூண்டு விலை குறைந்திருப்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.