அரசு ஊழியர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..!! தமிழ்நாடு அரசு மாஸ் அறிவிப்பு..!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய நகரங்கள், எக்ஸ் (X), ஒய் (Y), இசட் (Z) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 27, 18, 9 சதவீதம், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது. இரண்டு 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரித்து, மேலும் சில அலவன்சுகளும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில், குட்நியூஸ் ஒன்றினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய பணி தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, வீட்டு வாடகைப்படியை, 10% முதல் 30% வரை உயர்த்தி, ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வீட்டு வாடகைப்படியை, முறையே 30, 20, 10 சதவீதம் என மத்திய அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் மத்திய தொகுப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வீட்டு வாடகைப்படியை உயர்த்தி, கடந்த ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
Read More : 3-வது முறையாக கர்ப்பமான சிவகார்த்திகேயன் மனைவி..!! வைரலாகும் வீடியோ..!! ரசிகர்கள் வாழ்த்து..!!