மீன் பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! இன்று முதல் தடை நீக்கம்..!! விலையும் அதிரடியாக குறைந்தது..!!
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், இன்று வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி அதிகாலையிலேயே பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்க குவிந்தனர்.
சென்னை காசிமேடு துறைமுகம், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி என பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் மீன்களை வாங்க ஆர்வமுடன் அதிகாலையிலேயே குவிந்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது. கேரளாவிலும் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததாலும், தமிழ்நாட்டில் ஏற்கனவே விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக்காலம் இருந்து வந்த நிலையில், கேரளாவுக்கும் மீன்கள் அனுப்பப்பட்டன.
கடந்த ஒரு வார காலமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், குறைவான படகுகுகளே கடலுக்கு சென்றன. பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. இதனாலும், கேரளாவுக்கு அதிக அளவு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால், மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ சீலா 1500 ரூபாய் வரையும், ஒரு கிலோ விளை மீன் 700 ரூபாய் வரையும், ஊளி மற்றும் பாறை மீன்கள் ஒரு கிலோ 600 ரூபாய் வரையும் விற்பனையானது.
அதேபோல், அயிலேஷ் கிலோ 300 ரூபாய் வரையும், கேரை மற்றும் சூரை மீன்கள் கிலோ 300 ரூபாய் வரையும், நண்டு ஒரு கிலோ 500 ரூபாய் வரையும், பறவை மீன்கள் கிலோ 250 ரூபாய் வரை விற்பனையானது. மீன்களின் விலை கடந்த வாரம் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று முதல் மீன்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மீன் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Read More : ’ரத்தம் வடிய வடிய சித்ரவதை’..!! நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர்..!! பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாக்..!!