விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! இன்று முதல் இலவசமாக மண் எடுக்கலாம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?
ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்க இன்று முதல் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்களில் வண்டல் மண் ஏராளமாக தேங்கியுள்ளது. இந்த மண்ணை அள்ளி விவசாயிகள் தங்கள் நிலத்தில் போடுவார்கள். அப்படி போட்டால், மண்வளத்திற்கு தேவையான அதிகளவில் ஊட்டசத்துக்கள் கிடைக்கும். இதனால், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவுக்கு ஏற்ப இலவசமாக வண்டல் மண் வழங்கப்படும்.
வண்டல் மண்ணை விளை நிலங்களில் போட்டு வந்தால், அந்த விளை நிலத்தில் விளைபொருட்கள் செழிப்பாக வளரும். இந்த மண் எடுக்கும் அனுமதி, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த வண்டல்மண் எடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டது போன்ற ஒரு நிலை உருவாகும் என்பதுடன் விவசாயிகளுக்கும் பலன் அளிக்கும் திட்டம் என்பதால் பல ஆண்டுகளாக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து கட்டணமின்றி களிமண், வண்டல் மண் எடுக்க இன்று முதல் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஆணைகளை வழங்கி முதலமைச்சர் முக.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, இனி ஏரிகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு விண்ணப்பித்தால், கட்டணமின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்.
Read More : BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை எதிரொலி..? சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்..!!