Gold loan: விவசாயிகளுக்கு குட்நியூஸ்!… இனி கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.4,500 கடன் பெறலாம்!
Gold loan: கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக்கடன் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகள் அதன் உறுப்பினர்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இவ்வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு மற்ற வங்கிகளை விட குறைந்த அளவிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். இதைப்போலவே மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.4,200/- கடனாக நகை அடமானத்தின் போது இதுவரை வழங்கப்பட்டு வந்தது.மற்ற வங்கிகளிலும், சங்கங்களிலும், 3,800 - 4,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கிராம் தங்கம் விலை, 6,115 ரூபாயாக உள்ளது. தற்போது தங்க நகைகளின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் கூட்டுறவு துறை நகை கடன் மீதான மதிப்பை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் படி., ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.4,500/- கூட்டுறவு வங்கிகளில் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இது கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.