விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! 17-வது தவணைக்கான நிதி விடுவிப்பு..!! உங்கள் அக்கவுண்டை செக் பண்ணுங்க..!!
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 17-வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். பிரதமராக பதவியேற்ற பின்னர், பிஎம் கிசான் நிதியின் 17-வது தவணைத் தொகையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,000 கோடி விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது முதல் கோப்பில் கையெழுத்திட்ட பிறகு பிரதமர் மோடி பேசுகையில், “எங்களுடையது கிசான் கல்யாணுக்கு முழு அர்ப்பணிப்புள்ள அரசு. எனவே, பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது. வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக அதிகமாக பணியாற்ற விரும்புகிறோம்” என்றார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 17-வது தவணை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உடனடி நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Read More : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை..!! என்ன குற்றத்திற்காக தெரியுமா..?