For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! PKVY திட்டத்தில் உங்களுக்கும் ரூ.50,000 வேண்டுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

05:20 AM May 22, 2024 IST | Chella
விவசாயிகளுக்கு குட் நியூஸ்     pkvy திட்டத்தில் உங்களுக்கும் ரூ 50 000 வேண்டுமா    உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூலம் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய அரசு நிதியுதவி வழங்குகிறது. இதனால் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்களின் பயன்பாடு வெகுவாக குறையும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Advertisement

PKVY திட்டத்தின் கிழ் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.1.197 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இயற்கை விவசாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு விவசாய சாகுபடி நிலம் இருக்க வேண்டும். பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் கீழ் விண்ணப்பிக்க சில ஆவணங்கள் கட்டாயம் ஆகும். அதன்படி, ஆதார், முகவரிச் சான்று, வருமானச் சான்று, அடையாள அட்டை, ரேஷன் அட்டை, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கட்டாயம்.

விண்ணப்பிப்பது எப்படி? :

* முதலில் நீங்கள் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

* முகப்பு பக்கத்தில் அப்ளை என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளிட வேண்டும்.

* உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்பி விண்ண படிவத்துடன் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* பின்னர் சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பதிவு எண் அனுப்பி வைக்கப்படும்.

Read More : டீ குடிக்கும்போது இதை மட்டும் தொடவே தொடாதீங்க..!! மீறினால் என்ன ஆபத்து வரும் தெரியுமா..?

Advertisement