விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! மத்திய அரசின் ஜாக்பாட் அறிவிப்பு..!! இனி பணம் கொட்டப்போகுது..!!
மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதன் காரணமாக சர்ச்சைக்குரிய சட்டங்கள் எதையும் அந்த கட்சி கையில் எடுக்காது என்று கூறப்படுகிறது. அதே நேரம் விவசாயிகளுக்கு அவர்களது நலனை இன்னும் அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுவதற்கு பதிலாக ரூ.8000 ஆக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அந்த வகையில், 18-வது தவணையாக நிதியுதவி வழங்கப்படும் போது ரூ.4000 வழங்கப்படலாம். 18-வது தவணை நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக விவசாய அமைப்புகள் வல்லுனர்கள் உள்ளிட்டோரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து ஆலோசிக்க உள்ளார். அப்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனை, அவர்களது நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
இதேபோல், பெண் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கலாமா என்ற ஆலோசனையும் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. வரவிருக்கும் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் நடுத்தர மக்களின் நல்லெண்ணத்தை பெற பாஜக கூட்டணி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read More : கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சமா..? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! வைரலாகும் வீடியோ..!!