திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்..!! இனி அன்லிமிடெட் லட்டு..!! தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்த பின்பு, பக்தா்கள் அதிகம் விரும்புவது திருப்பதி லட்டு பிரசாதம் தான். திருப்பதி லட்டுவுக்கு எப்போதுமே டிமாண்டு அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதனால், திருப்பதி லட்டுக்களை வாங்கி கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில்." திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வந்த பின்னர், பக்தா்கள் தங்களிடம் உள்ள தரிசன டிக்கெட்டை காட்டினால் ரூ.50 கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.
அதேபோல், தரிசனம் செய்யாமல் வரும் பக்தா்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் தலா 2 லட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்டு பிரியா்கள் மிகுந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.