முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே செம குட் நியூஸ்..!! தக்காளியை போல் வெங்காயமும்..!! அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு..!!

10:19 AM Nov 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாயை தொட்டுள்ளது.

Advertisement

ஒரு கிலோ சின்ன வெங்காயம் 130 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தினசரி 70 டன் விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென்று பாதியாக குறைந்த நிலையில், விலை அதிகரித்தது. இந்நிலையில், வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேவை ஏற்பட்டால் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். மேலும், தக்காளியை போல ரேஷன் கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Tags :
தக்காளிரேஷன் கடைகள்வெங்காயம்
Advertisement
Next Article