For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Good News | 'இது இருந்தால்போதும்’..!! தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!

07:17 AM Apr 04, 2024 IST | Chella
good news    இது இருந்தால்போதும்’     தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்
Advertisement

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டண சலுகை வழங்கப்பட்டு வழங்கி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. கல்வியில், வேலையில் இடஒதுக்கீடு, மாதந்தோறும் உதவித்தொகை, பேருந்துகளில் கட்டண சலுகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஏறிய இடத்தில் இருந்து 100 கிமீ வரை கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். அதற்கு பின் 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது தவிர பழைய பயண அட்டையை காட்டி பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Read More : மாணவர்களே செம குட் நியூஸ்..!! இந்த தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு..!!

Advertisement