For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Good News | அரசு ஊழியர்களின் மனதை குளிரவைத்த அறிவிப்பு..!! இனி அகவிலைப்படி 50% ஆக உயர்வு..!!

07:08 AM Mar 13, 2024 IST | 1newsnationuser6
good news   அரசு ஊழியர்களின் மனதை குளிரவைத்த அறிவிப்பு     இனி அகவிலைப்படி 50  ஆக உயர்வு
Advertisement

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து கடந்த அரசு விட்டுச்சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையை கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றிற்கு இடையேயும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

Advertisement

அந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து பரிசீலித்து இந்த உத்தரவினை 1.1.2024 முதல் செயல்படுத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும்” என்று கூறப்பட்டுள்ளது.

Read More : Post Office | இந்த ஒரு திட்டம் போதுமே..!! லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்..!! போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்..!!

Advertisement