குட்நியூஸ்!… நிலவின் துருவப் பகுதியில் அதிகளவு தண்ணீர்!… உறுதி செய்த இஸ்ரோ!… எப்படி உருவாகியிருக்கும்?
Moon: நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மேலும், வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு தென் துருவப் பகுதியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
இம்ப்ரியன் கால எரிமலை அவுட்-கேஸிங் (வாயு) ஏற்பட்ட போது துருவப் பகுதியில் பனியின் ஆதாரம் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு சுமார் ஏழு கருவிகளை ஆய்வுக் குழுவினர் பயன்படுத்தி உள்ளனர். சந்திரயான்-2ன் ட்யூயல் ஃப்ரீக்வென்ஸி சிந்தட்டிக் அப்பர்ச்சர் ரேடார் கருவியின் போலரிமெட்ரிக் ரேடார் தரவைப் பயன்படுத்தி துருவப் பள்ளங்களில் நீர் பனி இருப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து சுட்டிக்காட்டிய முடிவையும் இந்த ஆய்வு ஆதரிக்கிறது.
Readmore: அதிர்ச்சி!… 2000 பேர் பலி!… 4 மடங்கு அதிகரித்த டெங்கு பரவல்!