முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் பை!. மல்யுத்தம் தன்னை வென்றுவிட்டது!. ஓய்வு அறிவித்து வினேஷ் போகத் உருக்கம்!

Good bye! Wrestling has defeated itself!. Vinesh Bhoghath announced his retirement!
07:07 AM Aug 08, 2024 IST | Kokila
Advertisement

Vinesh Bhoghath: ஒலிம்பிக்கில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மல்யுத்தம் தன்னை வென்றதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்கப் பதக்கம் பெறுவார். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்திருந்தது.

நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தற்கு மத்தியில் மற்றுமொரு பேரிடியாக இந்திய மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக வினேஷ் போக்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மல்யுத்தம் தன்னை வென்றதாகவும், தான் தோற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தைரியத்தை இழந்துவிட்டதாகவும், தனக்கு வலிமை இல்லை என்றும் குட் பை மல்யுத்தம் 2001 - 2024 எனவும் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

Readmore: தமிழகமே…! “வாழ்ந்து காட்டுவோம்” பெண்கள் தொழில் ஊக்குவிக்க தமிழக அரசு சூப்பர் திட்டம்…!

Tags :
Good byeretirementVinesh Bhoghath announced
Advertisement
Next Article