ரஜினிக்கு கோல்டன் விசா..!! புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தரிசனம்..!! வைரல் வீடியோ..!!
சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். 1970-களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே சூப்பர் ஸ்டாராக மாறினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருந்து வருகிறார். இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறியுள்ளார்.
இந்நிலையில், துபாய் சென்றுள்ள ரஜினியை கௌரவிக்கும் விதமாக அவருக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி உள்ளது. கமல்ஹாசன், பார்த்திபன், விஜய் சேதுபதி, சிம்பு, த்ரிஷா ஆகியோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், தற்போது ரஜினிக்கும் வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசா பெற்றவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவர். இந்நிலையில், ரஜினிகாந்த் அபுதாபுயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் இந்து கோயிலுக்கு சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More : தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!