தமிழ்நாட்டில் தீயாய் பரவும் ’பொன்னுக்கு வீங்கி நோய்’..!! அறிகுறிகள் இதுதான்..!! இதற்கு மருந்துகள் இருக்கா..?
தமிழ்நாட்டில் ’பொன்னுக்கு வீங்கி நோய்’ அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையேயுள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி, காய்ச்சல் ஏற்படும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படும்.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கபம், சளி மற்றும் நெருக்கமான தொடர்பு மூலம் பரவும் வைரஸால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த தொற்று தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு இது மூளை காய்ச்சலாகவோ, விரை வீக்கமாகவோ தீவிரமாகலாம். தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீரும், திரவ உணவுகளும் எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம்.
ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள், அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்நிலையில், தமிழ்நாட்டில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், ஒவ்வொரு பருவ காலங்களிலும், சில வகை தொற்றுகள் பரவுகின்றன. அந்த வகையில் தற்போது பொன்னுக்கு வீங்கி பரவி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தாண்டு அந்த பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகியுள்ளது. இருந்தாலும், அதுகுறித்து ம்க்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவர், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது” என்றார்.
Read More : ரூ.30,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..? அக்.31ஆம் தேதியே கடைசி..!! உடனே முந்துங்கள்..!!