For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gold | ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

12:02 PM Mar 05, 2024 IST | 1newsnationuser6
gold   ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை     அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
Advertisement

தங்கத்திற்கு சிறப்பானது என்பது தவிர, அதை பதுக்கி வைக்கவும் பலரும் வாங்குகின்றனர். இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவதும், அதை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவதும் தான் தங்கத்தை பதுக்க முக்கிய காரணமாகும். திருமணங்கள் அல்லது முக்கிய விழாக்களின் போது தங்கத்தை வாங்கி, பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. தங்கம் விலை எதுவாக இருந்தாலும், தங்கத்திற்கு இந்தியாவில் தனி இடம் இருப்பதை மறுக்க முடியாது.

Advertisement

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 85 ரூபாய் உயர்ந்து, ரூ.6,015-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து, ரூ.48,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,858-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 69 ரூபாய் குறைந்து, ரூ.4,927-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ரூ.78,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : Vijayalakshmi | ”சீமான் மாமா உங்கள மறக்க முடியல”..!! விஜயலட்சுமி வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்..!!

Advertisement