For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தங்கம், வெள்ளி விலை உயர்வு எதிரொலி..!! பட்டுச்சேலைகளின் விலையும் தாறுமாறாக உயர்வு..!!

As the price of gold and silver is increasing, the price of silk has also increased dramatically.
11:29 AM May 22, 2024 IST | Chella
தங்கம்  வெள்ளி விலை உயர்வு எதிரொலி     பட்டுச்சேலைகளின் விலையும் தாறுமாறாக உயர்வு
Advertisement

தங்கம்-வெள்ளி விலை உயர்ந்து வரும் நிலையில், பட்டுச்சேலையின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஒரு மாதமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22) இன்று எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.54,880-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் ரூ.6,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 1.30 உயர்ந்து ரூ.100.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.100,300-க்கும் விற்பனையாகிறது.

இந்நிலையில், தங்கம்-வெள்ளி விலை உயர்ந்து வரும் நிலையில், பட்டுச்சேலையின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சேலைகளின் ஜரிகை வேலைப்பாடுகளை செய்ய தங்கம், வெள்ளி பயன்படுத்தப்படுவதால், விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் பட்டுச் சேலையின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Read More : இது என்ன Bi-Directional மின் மீட்டர்..? ரூ.5,011 கட்டணமா..? என்ன நன்மைகள்..? மின்வாரியம் அதிரடி..!!

Advertisement