Gold Rate | தூக்கி அடித்த தங்கம் விலை..!! ரூ.59,000-ஐ நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!
தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி 15% இருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப 2 மாதங்களுக்கு முன் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,000-ஐ நெருங்கியுள்ளது. தொடர் உச்சத்தால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,360-க்கும், கிராமுக்கு ரூ.7,795 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.1,12,000-க்கும் விற்பனையாகிறது. பண்டிகை நாட்கள் மற்றும் சுப முகூர்த்த தினங்கள் என்பதால், நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதிர்ச்சியில் உள்ளனர்.