மக்களுக்கு குட் நியூஸ்.! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.! இன்றைய ரேட் விவரங்கள்.!
பண்டையக் காலம் முதல் வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கம் இன்றும் மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை அந்த நாட்டின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் தங்கம் கலாச்சார அடையாளமாக இருப்பதோடு வாணிபுத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்க அணிகலன்களை விரும்பி அணிகின்றனர். மேலும் பங்குச் சந்தை மற்றும் வியாபாரத்திலும் தங்கத்தின் மீது பெரும்பாலானவர்கள் முதலீடு செய்து லாபம் பெறுகின்றனர். சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று வீழ்ச்சியை கண்டிருக்கிறது.
சென்னை ரீடைல் மார்க்கெட்டில் ஒரு கிராம் ரூ.5,810/- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 22 கேரட் தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைந்து ரூ.5,750 /-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ரூ.46,000/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு49 ரூபாய் குறைந்து ரூ.4,710 /-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரனுக்கு 392 ரூபாய் குறைந்து ரூ.37,680 /-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ரூ.6,273 /-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரனுக்கு520 ரூபாய் குறைந்து ரூ.50,184/-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:
கிராம் இன்று நேற்று
1 ரூ.₹5,750 /- ரூ.5,810 /-
8 ரூ.46,000 /- ரூ.46,480 /-
சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:
கிராம் இன்று நேற்று
1 ரூ.6,273 /- ரூ.6,338 /-
8 ரூ.50,184 /- ரூ.50,704 /-
சென்னையில் இன்று 18 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:
கிராம் இன்று நேற்று
1 ரூ..4,710 /- ரூ..4,759 /-
8 ரூ..37,680 /- ரூ..38,072 /-