Gold Rate | உச்சம் தொட்ட தங்கம் விலை..!! இனி குறையவே வாய்ப்பில்லையாம்..!! சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் 2ஆம் தேதி துவங்கி 9ஆம் தேதி வரையிலும் தங்கத்தின் விலை கிராமுக்கு 220 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,760 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களில் நேற்று முதல் முறையாக தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 குறைந்திருந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 48,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 6,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 49,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே போல் வெள்ளியின் விலையும் கிராமிற்கு கிடுகிடுவென உயர்வை சந்தித்துள்ளது. நேற்று 78 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, இன்று ஒரு ரூபாய் 50 பைசா உயர்ந்து, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது, தங்கம் வாங்குவோரிடையே மட்டுமின்றி தங்கத்தை விற்பனை செய்யும் நகைக்கடை உரிமையாளர்களிடமும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : Amit Shah | குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்களுக்கு கூட உரிமை உள்ளது..!! அமித்ஷா அதிரடி..!!