முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Gold Rate | வரலாறு காணாத உச்சம்..!! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

10:49 AM Apr 01, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து 6,455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 5,815 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5,840 ஆக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாதம் முழுவதும் அடுத்தடுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தது. புதிய உச்சமாக கடந்த மார்ச் 27ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்தது. இந்நிலையில், இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்து, 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 உயர்ந்து புதிய உச்சமாக 51,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளி நேற்று 81 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 60 பைசா உயர்ந்து, 81 ரூபாய் 60 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : பூதாகரமாக வெடித்த கச்சத்தீவு விவகாரம்..!! இலங்கையிடம் சென்றது எப்படி..? யார் காரணம்..? மத்திய அமைச்சர் பரபரப்பு விளக்கம்..!!

Advertisement
Next Article