Gold Rate | நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..!!
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். அதிலிருந்து, தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3000-க்கும் மேல் தங்கம் விலை குறைந்தது. பின்னர் மீண்டும் உயர தொடங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வகையில், இன்றைய தினம் தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனையானது. அதேபோல், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,470-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றைய தினம் (ஆகஸ்ட் 06) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,400-க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 6,855-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.54,840-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.4 குறைந்து கிராம் வெள்ளி ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.