For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.360 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

Gold prices hit a new peak.. Jewelers shocked as Rs. 360 rose in a single day..
10:11 AM Oct 16, 2024 IST | Kathir
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை   ஒரே நாளில் ரூ 360 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
Advertisement

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

Advertisement

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120க்கு விற்பனையாகிறது. எனினும் சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More: இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..!! இனியாவது உஷாரா இருங்க..!!

Tags :
Advertisement