முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போலயே..!! இன்றைய நிலவரம் இதோ..

As of today, the price of 22 carat jewelery gold is selling at Rs 57,288 with an increase of Rs 8 per sawan. A gram is Rs.7,161.
09:51 AM Oct 18, 2024 IST | Mari Thangam
Advertisement

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும்  வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

Advertisement

அதற்கேற்ப இரண்டு மாதங்களுக்கு முன் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920க்கு விற்பனை. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.105க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயருமே தவிர குறைய வாய்ப்பில்லை. கூடிய விரைவில் தங்கம் விலை பவுன் ரூ.58 ஆயிரத்தை தொடும் என்கின்றனர்.

Read more ; டீனேஜராக வாழ்க்கையில் பொறுப்புடன் இருப்பது எப்படி? – நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் இதோ..

Tags :
Gold prices
Advertisement
Next Article