ஒருவழியாக இன்று தங்கம் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா..? மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..
இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7260க்கு விற்பனை செய்யப்பட்டது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,080க்கு விற்பனையானது.
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ.7,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.57,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.99க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More : அரசின் இந்த திட்டத்தில் ரூ. 5000 முதலீடு செய்தால், முதிர்ச்சியில் ரூ. 8,54,272 கிடைக்கும்.. எப்படி தெரியுமா?