ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்துக் கொண்டே வந்தது. கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.59,080-க்கும் விற்பனை ஆனது. பின்னர், விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.55,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,115-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.56,920-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.