மூன்று நாட்களாக மாறாத தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி..!! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா..?
இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.
2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சனிக்கிழமை சற்று குறைந்த தங்கத்தின் விலையானது நேற்று எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனையானது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கத்தின் விலையானது எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 7,215-க்கும் ஒரூ சவரன் ரூ.57,720விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை உயராத காரணத்தால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Read more ; நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் வாழ என்ன செய்ய வேண்டும்..? கருட புராணம் கூறும் ரகசியம் இதோ..