Today Gold Rate : வாரத்தின் முதல் நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ..
நேற்று மே 5 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லதரசிகள் அச்சம் அடைந்து வருகிறனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ..
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6610-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. மே மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,610-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,415-க்கும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.87.50-க்கும், ஒரு கிலோ ரூ.87,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.