முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

56 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.720 உயர்வு..!

Gold price close to 56 thousand..! Rs. 720 increase in one day..!
10:05 AM Jul 17, 2024 IST | Kathir
Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360க்கு விற்பனையாகிறது.

Advertisement

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தா நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்து இருப்பது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் சவரனுக்கு ரூ360 உயர்ந்து ரூ.54,640க்கு விற்பனையான நிலையில், இன்று இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.55,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல் வெள்ளியின் விலையும் இன்றைய தினம் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.100.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.1,00,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
gold rate in chennaiigold rate todaytoday gold rateதங்கம் விலை நிலவரம்
Advertisement
Next Article