For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gold | சரசரவென சரிந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

11:30 AM Mar 13, 2024 IST | 1newsnationuser6
gold   சரசரவென சரிந்த தங்கம் விலை     இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா
Advertisement

தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம் தான். தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கிடுகிடுவென அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மளமளவென சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.48,880-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,110-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.78.50-க்கும், கிலோ வெள்ளி ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Read More : Ration | வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு..!! பெண்களே ரூ.1,000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ரெடியா..?

Advertisement