தங்கம் வீட்டில் தங்கவில்லையா..? இந்த பரிகாரங்கள் செய்தால் ஸ்வர்ண தோஷம் உடனடியாக நீங்கும்..!!
பெண்கள் விரும்பும் பொருட்களில் ஒன்று தங்கம். இந்த தங்கத்தை கஷ்டப்பட்டு வாங்கி வீட்டில் வைத்தாலும் தங்குவது இல்லை. அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இல்லை விற்கும் நிலை வந்துவிடுகின்றது. தங்க நகை வாங்க வேண்டும் என்று பணம் சேர்த்து வைப்பர். ஆனால் கடைசி வரை தங்கம் வாங்க முடியாது. நாம் என்ன செய்தலும் தங்கம் வீட்டில் தங்கவில்லையா ஸ்வர்ண தோஷம் இருக்கலாம். தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளிக்கிழமை அன்று சாமிக்கு பூஜை செய்யும் போது பித்தளை அல்லது செம்பு தட்டில் வீட்டிலிருக்கும் ஒரு தங்க நகையை வைத்து மலர்கள் தூவி தீபா ஆராதனை காட்டி மீண்டும் அதனை பீரோவில் வைக்கவும். அப்போது தங்க நகையுடன் மூன்று ஏலக்காய் மூன்று கிராம்பு மற்றும் இரண்டு துளசி இலைகளையும் சேர்த்து வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து காய்ந்த துளசி இலைகளை நீக்கிவிடவும். பின்னர் அடுத்து வெள்ளிக்கிழமை வரும்போது ஏலக்காய் மற்றும் கிராம்பை மாற்றி வைக்கவும். இவ்வாறு செய்து வர தங்கம் வீட்டில் நிலையாக தங்கும்.
புதியதாக தங்கம் வாங்குபவர்கள் தங்கம் வாங்கிக் கொண்டு வரும்போது மஞ்சள் கிழங்கு குங்குமம் துளசி அல்லது தாமரை பூவையும் தங்கத்துடன் சேர்த்து வாங்கி வர வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் இவற்றை பூஜை அறையில் சிறிது நேரம் வைத்து பூஜை செய்துவிட்டு மஞ்சள் நீர் தெளித்து நகைகளை பீரோவில் வைக்கவும். அவற்றுடன் துளசி இலைகள் குங்குமம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றையும் வைக்கவும். இவற்றை வைக்கும் போது தாமரை அல்லது துளசி இலைகள் காய்ந்து விட்டால் அவற்றை அகற்றி விடவும்.
வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்துவிட்டு ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் 5 ஏலக்காய் 5 கிராம்பு மற்றும் கற்பூரம் ஆகியவற்றை வைத்து ஒன்றாக கட்டி அதனையும் நகையுடன் சேர்த்து பீரோவில் வைக்கவும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாற்றி செய்து வர தங்கம் வீட்டில் நிலையாக தங்குமென்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
Read more ;ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..!! – மத்திய கிழக்கில் இனி நிம்மதி