முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தங்கப் பத்திர விற்பனை..!! இந்த பொன்னான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

05:20 PM Dec 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மலிவு விலைக்கு தூயத் தங்கம் வாங்க சூப்பரான வாய்ப்பு. ரிசர்வ் வங்கி (RBI) 2023-2024 நிதியாண்டிற்கான இறையாண்மை தங்கப் பத்திர (Sovereign gold bond-SGB) மூன்றாவது தவணை விற்பனை தொடங்கியது. தங்க பத்திர விற்பனை டிசம்பர் 22 ஆம் தேதி முடிவடையும். இந்த வெளியீட்டிற்கான விலையை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விரைவில் அறிவிக்கும். ஆனால், விற்பனைக்கு முன்பு கடந்த 3 நாட்கள் டிசம்பர் 15,16,17 அன்று 999 தூய்மையான தங்கத்திற்கான இறுதி விலையின் IBJA ஆல் வெளியிடப்பட்டது. அதன்படி 2023 ஒரு கிராம் தங்கம் ரூ. 6,199 ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

நீங்கள் ஆன்லைன் மூலம் வாங்கினால் 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். இந்த தங்க பத்திரம் வாங்கினால் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை. மேலும், இதற்கு ஜிஎஸ்டி வரியும் இல்லை. இத்தனை சிறப்பம்சங்கள் இருக்கும் தூய தங்கத்தை வாங்க மிஸ் பண்ணிடாதீங்க. நீங்கள் ஆன்லைனில் வாங்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் வாங்கிக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த தங்க பத்திர விற்பனைக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படும். நீங்கள் டிஜிட்டல் முறையில் வாங்குவதால் தங்கம் திருடு போகும் என கவலை வேண்டாம். மேலும் இது 8 ஆண்டு காலம் லாக்-இன் இருப்பதால் 8 ஆண்டுகளில் தங்கம் விலை எங்கயோ போயிருக்கும். நீங்கள் முதலீடு செய்தததைவிட பலமடங்கு லாபம் மற்றும் வட்டியுடன் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். இப்போ சொல்லுங்க இது Worth தானா மக்களே.

Tags :
தங்கப் பத்திர விற்பனைரிசர்வ் வங்கி
Advertisement
Next Article