இரண்டாகப் பிரியும் கோத்ரேஜ் நிறுவனம்.. 127 ஆண்டுகளில் முதல் பாகப்பிரிவினை!
இந்தியாவின் பாரம்பரியமான நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் நிறுவனம் இரண்டாகப் பிரிகிறது. இதற்கு இரு தரப்பும் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
124 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனம் பூட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது, அதன் பிறகு முதன்முதலாக வெஜிடபிள் ஆயில், சோப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரித்தது. தற்போது நான்காம் தலைமுறை வணிகத்தை இந்தக் குழுமம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கோத்ரெஜ் நிறுவனம் நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், பொறியியல் தொடர்புடைய ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் ஆகும். இதனை பிரிப்பது தொடர்பாக பல மாதங்களாக விவாதிக்கப்பட்டு வந்தது, இப்போது ஆதி கோத்ரேஜின் மகன் பிரோஷா கோத்ரெஜ் மூலம் வேகம் எடுத்துள்ளது.
127 கால வணிகப் பின்னணியில் தற்போது முதல் முறையாக பிளவு கண்டுள்ளது. கோத்ரெஜ் ஆலமரத்தின் ஆதி கோத்ரெஜ் (82) மற்றும் அவரது சகோதரர் நாதிர் (73) ஒருபுறமும், அவர்களது உறவினர்கள் ஜம்ஷித் கோத்ரெஜ் (75) மற்றும் ஸ்மிதா கோத்ரெஜ் கிருஷ்ணா (74) மறுபுறமுமாக இரண்டாக சொத்துக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமம் என்பது கோத்ரெஜ் மற்றும் போய்ஸ் துணை நிறுவனங்களை உள்ளடக்கியது. அவை விண்வெளி, விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் என பல துறைகளில் முன்னிலையில் உள்ளன.
பிரோஜ்ஷாவின் 4 வாரிசுகளில் இருவர் வசம் மட்டுமே கோத்ரெஜ் குழுமம் அடங்கிப்போனது. தற்போது அடுத்தடுத்த தலைமுறைகளில் வாரிசுகள் அதிகரித்ததில், எதிர்காலத்தின் சிக்கல்களைத் தவிர்க்க தற்போது கோத்ரெஜ் நிறுவனம் அதன் பட்டியலிட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களாக இரண்டாக பிரிந்திருக்கிறது. எனினும் கோத்ரெஜ் என்ற பாரம்பரியத்தின் பெயர் தொடர்கிறது.