For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BOX OFFICE : குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.. 12 நாட்களில் GOAT செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

GOAT has passed 12 days at the box office so far only in Tamil Nadu with Rs. It has collected more than 178 crores.
10:46 AM Sep 17, 2024 IST | Mari Thangam
box office   குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி   12 நாட்களில் goat செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா
Advertisement

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் கோட் திரைப்படம் உருவானது.

Advertisement

ரிலீஸுக்குப் பின்னர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற தொடங்கியது. ஆனாலும் வசூலில் குறை வைக்கவில்லை.. படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித், ரஜினி, சூர்யா மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் ரெஃப்ரன்ஸ்களை அமைத்திருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அதுபோல சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா போன்றோரின் கேமியோக்களும் ரசிகர்களை கவர்ந்தன.

இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் கிடைத்த அளவுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களில் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் GOAT படத்தின் வசூல் நாளுக்கு நாள் சாதனை படைத்து வருகிறது.  GOAT படம் வெளிவந்து 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 178 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விரைவில் ரூ. 200 கோடியை தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் உலகளவில் 12 நாட்களில் ரூ. 390 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 400 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. GOAT படத்திற்கு முன் வெளிவந்த லியோ உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; குலசை முத்தாரம்மன் கோவிலில் வேலை.. 40 ஆயிரம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா?

Tags :
Advertisement