முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

GOAT First Single : 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை..! "அரபிக் குத்து" சாதனையை முறியடித்த "விசில் போடு"..!

07:00 PM Apr 15, 2024 IST | Kathir
Advertisement

கோலிவுட் என்பது தமிழக அரசியல் மற்றும் ஆட்சி பீடத்துக்கான ராஜபாட்டையாக விளங்கி வருகிறது. இந்த வழியில் பல நட்சத்திரங்கள், சினிமா மூலமாக சேகரித்த பிரபல்யம், ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை தேர்தல் அரசியலில் வாக்குகளாக மாற்றி வெற்றி பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களின் வரிசையில் தளபதி விஜயும் சேர்ந்திருக்கிறார். புதிய கட்சியை ஆரம்பித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இந்த இடைவெளியில் ஒப்புக்கொண்ட ஒரு சில திரைப்படங்களை வேகமாக முடித்துக்கொடுத்தும் வருகிறார். இதில் நேற்றைய தினம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடாக, ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியானது. பாடல் வெளியான வேகத்தில் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

யுவன் சங்கர் ராஜாவுடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய் இணைந்திருக்கிறார். விஜய் மட்டுமன்றி பிரபு தேவா, பிரசாந்த் என எதிர்பார்ப்புக்குரிய சக நடிகர்களும் இந்த பாடலில் விஜயுடன் சேர்ந்து நடனமாடுகின்றனர். இசை, காட்சி அனுபவம், பாடலை பாடிய விஜய் என ரசிகப் பார்வைக்கு எந்த குறையும் வைக்காத ‘விசில் போடு’ பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக தென்னிந்திய திரைப்படங்களில் முதல் இடத்தில் இருந்தது விஜயின் பீஸ்ட் படத்தில் வரும் "அரபிக் குத்து" பாடல் தான். இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 23.77 மில்லயன் பார்வைகளை கடந்திருந்த நிலையில், கோட் படத்தின் "விசில் போடு" பாடல் இதனை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

Read More: விவாகரத்து வழக்கு: தனுஷ் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக உத்தரவு!

Tags :
GOAT First SingleGOAT movievijay new movie
Advertisement
Next Article