For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேர்வு நுழைவு சீட்டை ஆடு தின்றதால் மன உளைச்சல்... மாணவியின் செயலால் பெற்றோர் அதிர்ச்சி!

05:14 PM Mar 28, 2024 IST | Baskar
தேர்வு நுழைவு சீட்டை ஆடு தின்றதால் மன உளைச்சல்    மாணவியின் செயலால் பெற்றோர் அதிர்ச்சி
Advertisement

கர்நாடக மாநிலம் பசவ கல்யாண் கோகுல கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த ரேவதியின், தேர்வு ஹால் டிக்கெட்டை ஆடு ஒன்று தின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி ரேவதி, ஹால் டிக்கெட் இல்லாமல் பள்ளிக்கு வர முடியாது என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அந்தக் கடிதத்தில், "நான் சாகப் போறேன். இதற்காக வருந்துகிறேன். எனது ஹால்டிக்கெட்டை ஆடு தின்று விட்டது" என்று எழுதி தனது சகோதரனிடம் கொடுத்துவிட்டு இரவு 7 மணியளவில் தலைமறைவானார். இந்நிலையில், ரேவதி காணாமல் போன தகவலறிந்ததும் குடும்பத்தினரும், உறவினர்களும் ரேவதியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவு 11.30 மணியளவில் உறவினர் வீட்டு கிணற்றில் இருந்து ரேவதியின் அழுகை சத்தம் கேட்டது.

அவரது குடும்பத்தினர் உடனடியாக அங்கு சென்று ரேவதியை கிணற்றில் இருந்து மீட்டனர். சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர்மட்டம் குறைந்து இருந்ததால், ரேவதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தலைமுறையினர், சின்ன சின்ன ஏமாற்றங்களையும், வசவுகளையும் தாங்கிக் கொள்ளமால் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை போதிய விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் என்பது தான் இந்த செய்தியின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

Advertisement