For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ரவுடிகளின் வீட்டிற்கே சென்று எச்சரிக்கை”..!! சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு..!!

Historical records should go to the houses of the criminals and warn them that action will be taken if they engage in illegal activities.
09:29 AM Jul 16, 2024 IST | Chella
”ரவுடிகளின் வீட்டிற்கே சென்று எச்சரிக்கை”     சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு
Advertisement

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவியேற்றதுமே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கண்காணிக்க வேண்டும்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீட்டிற்கே சென்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். ஜாமீனில் இருக்கும் ரவுடிகள், நிபந்தனைகளை மீறினால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Read More : தென்கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை..!! வடகொரியாவில் அதிரவைக்கும் சம்பவம்..!!

Tags :
Advertisement